இடைத்தேர்தல் – சாகர்திகி, கஸ்பா பெத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி!

மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி.

மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாஸ் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 8000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். சாகர்திகி இடைத்தேர்தலில் தொடர் முன்னிலை அடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுபோன்று, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கஸ்பா பெத் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தங்கேகர் சுமார் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தங்கேகர் 72,599 வாக்குகளையும், பாஜக வேட்பாளருமான ஹேமந்த் ரசானே 61,771 வாக்குகள் பெற்றனர்.

2022 டிசம்பரில் பாஜக எம்எல்ஏ முக்தா திலக் காலமானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு இடைத்தேர்தலில், 51 ஆண்டுகளுக்குப் பிறகு சாகர்திகி சட்டமன்றத் தொகுதியிலும், 33 ஆண்டுகளுக்குப் பிறகு கஸ்பா பெத் சட்டமன்றத் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment