பிரேமம் திரைப்படத்தின் நடிகை உடன் பும்ராவிற்கு காதலா ?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தற்போது இங்கிலாந்தில்  நடைபெற்று வரும் உலகக்கோப்பை போடியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் நடிகை அனுபமா ,பும்ரா இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
நடிகைகள் கிரிக்கெட் வீரரை காதலிப்பதும் ,திருமணம் செய்துகொள்வதும் தற்போது வழக்கமாக மாறி விட்டது.சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி , நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை அனுபமா மலையாளத்தில் பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர். இவர் தமிழில் கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.  இந்நிலையில் ட்விட்டரில் அனுபமா பதிவிடும் புகைப்படம் தனக்கு பிடித்து இருப்பதாகவும் பும்ரா ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார்.மேலும் பும்ரா பதிவிடும் புகைப்படத்திற்கு அனுபமா உடனே லைக் செய்து வருகிறார்.

இந்நிலையில் அனுபமாவும் , பும்ராவும் நெருங்கி பழகி வருவதாகவும் , அடிக்கடி சந்தித்து பேசி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி வருகிறது.இது குறித்து விளக்கம் அளித்த அனுபமா , நாங்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது.ஆனால் நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே தவிர வேற எந்த ஒரு தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.
 

author avatar
murugan