பதவியை ராஜினாமா செய்யவுள்ளாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளம் பத்தாத காரணத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்பொழுது 150,402 யூரோ (இந்திய மதிப்பின்படி1,30,21,014 ருபாய்) சம்பளம் வாங்குகிறார். அந்த சம்பளம், தனது முந்தைய பணியுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருப்பதாக பிரிட்டிஷ் செய்தி ஊடகம் தி டெய்லி மிரர் வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பில் தெரியவந்துள்ளது.

அந்த செய்தி தொகுப்பில், டோரி கட்சி எம்.பி. ஒருவர், பத்திரிகையில் மாதம் 23,000 யூரோ சம்பாதித்து வந்த போரிஸ் ஜான்சன், 6 மாதத்தில் அங்கிருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளனர். அவருக்கு 6 குழந்தைகள் உள்ளதாகவும், நிதி உதவி தேவைப்படும் அளவுக்கு இளைஞர்களாக உள்ளதாக தெரிவித்த அவர், போரிஸின் முன்னாள் மனைவி மெரினா வீலருக்கு விவாகரத்து ஒப்பந்தத்தின் பங்குகளை செலுத்த வேண்டியது இருந்ததாக தெரிவித்தார்.

மேலும், டோரி கட்சியின் தலைவராவதற்கு முன், அவர் டெலிகிராப் பத்திரிகையில் ஆண்டுக்கு 275,000 யூரோ சம்பளம் பெற்று வந்ததாகவும், அவர் எழுதும் இரண்டு உரைகளை வழங்குவதிலிருந்து மாதத்திற்கு 1,60,000 யூரோகளை தனியாக சம்பாதிப்பார் என அந்த செய்திதொகுப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அவருக்கு சம்பளம் பத்தாத காரணத்தினால், தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டே வருகிறது

பிரதமர் பதிவில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினால், அவருக்கு பதில் இந்திய வம்சாவளியான இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக் பிரதமராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.