#BREAKING: நடிகர் ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது? – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

ரஜினியின் ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்த மாறுபாட்டை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்போலோ தெரிவித்துள்ளது. நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என ரஜினி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஜினியின் ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும், ரஜினிக்கு இன்று மேலும் சில பரிசோதனைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவவித்துள்ளனர். மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்