#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு பரிசீலினை நாளை நடைபெற உள்ள நிலையில், மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் பிப்.7ம் தேதியாகும். 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

1374 மாநகராட்சி கவுன்சிலர், 3843 நகராட்சி கவுன்சிலர், 7621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்.22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக விறுவிறுப்பாக நடந்து வந்த வேட்புமனு தாக்கல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 5 மணிக்குள் வந்தர்வகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 5 மணிக்கு மேல் வருவோரிகளிடம் வேட்புமனுக்கள் பெறக்கூடாது என்று ஏற்கனவே அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

மாநகராட்சி தேர்தலுக்கு 6,818 பேரும், நகராட்சி தேர்தலில் போட்டியிட 12,171 பேரும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்றும் இதுபோன்று பேரூராட்சி தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 20,847 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Castro Murugan