#BREAKING: EIA ஆய்வு செய்ய தமிழக அரசால் குழு அமைப்பு.! முதல்வர்.!

தென்மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், இன்று நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.

இதையடுத்து, இன்று நெல்லை மாவட்டத்தில் ரூ.196.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் .

இந்நிலையில், நெல்லை  செய்தியர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு பற்றி ஆய்வு செய்ய தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டிருக்கிறது, மேலும் புதிய கல்விக் கொள்கையை பற்றிய ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு அமைத்த குழு தரும் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையில் அரசு முடிவெடுக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan