#Breaking:வலுப்பெற்ற தாழ்வு பகுதி – தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நாளை (மே 8 ஆம் தேதி) புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.அவ்வாறு உருவானால் இந்த புயலுக்கு ‘அசானி புயல்’ என்று வானிலை ஆய்வாளர்கள் பெயரிடுவார்கள் என்றும் இந்த புயல் தொடர்ந்து நகர்ந்து,மே 10 ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனால்,தமிழகத்தில் நாளை மறுநாள்(மே 9 ஆம் தேதி) 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,புதுக்கோட்டை,தஞ்சை,திருவாரூர்,நாகை,மயிலாடுதுறை, கடலூர்,அரியலூர்,திருச்சி,கரூர்,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,ஈரோடு,நாமக்கல்ம்,காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.