#BREAKING: பிஎஃப்ஐ அலுவலகங்கள் முன் இரும்பு தடுப்பு அமைப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு செல்ல போலீஸ் தடை.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத்துறை சோதனை அதிரடி நடத்தினர். இந்த சோதனையின் போது, தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ மற்றும் SDPI நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுவும் இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு சட்டவிரோதமானது என கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு செல்ல போலீஸ் தடை விதித்துள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்குள் யாரும் செல்லாத வகையில் போலீஸ் இரும்புதடுப்புகள் அமைத்துள்ளனர்.

மேலும், பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக சென்னையில் 4,000 போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment