#BREAKING: விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.

வடகிழக்கு பருவமழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.51 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 27 மாவட்டங்களில் 48,593 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 40,031 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. கடந்த அக்.1 முதல் டிசம்பர் 4 வரையான வடகிழக்கு பருவமழை காலத்தில் மழையால் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்கள் சேதமடைந்தன. சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில்  பகுதிகளில் நவ.3 முதல் நவ.11 வரை மழையால் பயிர்கள் பெரிது பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில், 32,533 ஹெக்டர் நிலங்களில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறையில் 40,031 விவசாயிகளுக்கு ரூ.43 கோடியும், இதுபோன்று, 5,222 ஹெக்டர் நிலங்கள் பாதித்த 26 மாவட்டங்களில் 8,562 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.6.96 கோடி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment