#BREAKING: கோயில் பணியாளர்களுக்கு 3,000 கருணைத்தொகை, அகவிலைப்படி உயர்வு – தமிழ்நாடு அரசு

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், கூலி பணியாளருக்கு கருணைத்தொகை ரூ.2,000 லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொங்கல் கருணைக்கொடை வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக இவ்வாண்டு ரூ.1.5 கோடி செலவாகும் என்றும் திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ரூ.1 லட்சம் ஆண்டு வருவாய் பெறும் கோயில்களின் நிரந்திர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி, அறநிலையத்துறை கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் நிரந்திர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 34% லிருந்து 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அகவிலைப்படி உயர்வால் 10,000 பேர் பயன்பெறுவார்கள், அரசுக்கு கூடுதலாக ரூ.7 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment