#BREAKING : ஜப்பானின் ஹொக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் முக்கிய தீவுகளின் வடக்கே உள்ள ஹொக்கைடோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.1 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இன்று மாலை 02:48 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் 50 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக ஜப்பானின் தீபகற்பத்தில் இருந்து பரவியுள்ள எரிமலைத் தீவுகளின் குழுவான இசு தீவுகளில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆகப்பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment