#BREAKING: பி.எஃப்.ஐ-யின் இணையதளம் முடக்கம்! – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கியது மத்திய அரசு.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு பிறகு, 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கி மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் சட்டவிரோதமானது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment