Monday, June 3, 2024

#BREAKING : எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு..!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு 

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருந்தனர். அதன்பின், தன்னை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று கர்நாடகா தேர்தலை சுட்டிகாட்டடி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.

ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிப்பு 

eps admk gs

இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளரானது செல்லும் என தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவித்துள்ளது. தன்படி, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இபிஎஸ்-க்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனு 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் இருந்து  டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

RELATED ARTICLES