#BREAKING: கரையை தொட்ட நிவர் புயலின் வெளிச்சுற்று.!

நிவர் புயலின் முக்கிய பகுதி கரையை தொட இன்னும் 5 முதல் 6 மணி நேரம் ஆகும் என கணிப்பு.

அதி தீவிர புயலாக மாறிய நிவரின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

மேலும், புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட நிலையில் இன்னும் 6 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை தொடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிவர் புயல் காரணமாக சென்னையில் 40 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் தற்போது காற்று வீசி வருகிறது.

அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்