#BREAKING: புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் இல்லை – அரசு

புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தகவல்.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறுவரை மற்றும் ஒதுக்கீடு செய்யும்போது தவறுகள் நடத்திருப்பதாகவும், முறையான வார்டுகள் ஒதுக்கப்படவில்லை என்றும் அம்மாநிலத்தில் முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பிரெகேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணையின்போது, புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், வார்டு ஒதுக்கீடு தொடர்பாக புகார்கள் தொடர்ந்து வருவதால், அதை மறுவரையரை செய்வதற்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமில்லை என்பதால், வரும் 21ம் தேதி நடத்தவுள்ள தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டியதில்லை என்றும் விசாரணையை அக். 7க்கு ஒத்திவைக்க புதுச்சேரி அரசு தரப்பு கோரிய நிலையில், வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்