BREAKING NEWS:நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களின் இணையத்தள சேவை முடக்கம் ரத்து..!!தமிழக அரசு.!!

நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களில் இணையத்தள சேவையை முடக்கத்தை  ரத்து செய்துள்ளது தமிழக அரசு

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் வன்முறை பரவாமல் தடுப்பதற்காக 27-ம் தேதி வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்க தமிழக அரசு  உத்தரவிட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு முதல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இணைய தள சேவை முற்றிலும் முடங்கியது. இதனால் வங்கி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி ,நெல்லை,கன்னியகுமார் மாவட்டங்களில் இணையம் முடக்கபட்டது தொடர்பாக இதனை எதிர்த்து வழக்கறிஞர் சூரியபிராகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார் இந்த நிலையில் தான் நீதிபதி தமிழக வழக்கறிஞரிடம் அடுக்கான கேள்விகளை கேட்டார்.

குமரி ,நெல்லை,மாவட்டங்களில் இணையத்தை முடக்கியது ஏன்? என்றும்
அரசிடம்  உரிய விளக்கம் பெற்று பிற்பகல் 3 மணிக்கு தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞர்ருக்கு உத்தரவிட்டார்

இந்த நிலையில் பதில் அளித்த தமிழக அரசு நெல்லை,கன்னியகுமாரி மாவட்டங்களில் இணையத்தள சேவையை முடக்கத்தை  ரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் தூத்துக்குடி இணையதள சேவை முடக்கம் நீடிக்கிறது என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

author avatar
kavitha

Leave a Comment