#BREAKING: மகப்பேறு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்வு – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

மகப்பேறு பேறுகால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு பணியில் உள்ளர்வர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, கடந்த 2011-ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதனடிப்பையில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதத்திலிருந்து 12 மாதமாக உயர்த்தப்பட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளிட்டுள்ளது. இதனிடையே, பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக தமிழக அரசு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்