#BREAKING: உள்ளாட்சி தேர்தல் – பறக்கும் படை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அமைத்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒரு செயற் குற்றவியல் நீதிபதி 2 அல்லது 3 காவலர்கள் கொண்ட பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என்றும் 24 மணிநேரமும் பறக்கும் படை செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படை இடம்பெற வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெறுவதையும், மாதிரி நடத்தை விதி கண்டிப்பாக அமலில் உள்ளத்தையும் பறக்கும் படை உறுதி செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்