#BREAKING: தோட்டக்கலை திட்டம் – பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு அழைப்பு.

தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.27.50 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. கத்திரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள், நடவுகன்றுகளை 40% மானியத்தில் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விதைகள், நடவுகன்றுகளை மானிய விலையில் வழங்க ரூ.8.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment