#BREAKING: பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்.!

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 6.45 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73, இவர் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். மாணிக்க விநாயகம் திருடா திருடி, சந்தோஷ் சுப்ரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

பருத்திவீரன், வெயில், சந்திரமுகி, உள்ளிட்ட படங்களின் பாடல்களை பாடியுள்ளார். மாணிக்க விநாயகம் பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. ராமையா பிள்ளையின் இளைய மகனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan