#BREAKING: தேர்தல் ரத்து – விளக்கம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இதில் சில இடங்களில் வேட்பாளர் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சில இடங்களில் நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் ரத்தான நிலையில், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம். தேர்தல் ரத்தானதுக்கு  உரிய காரணத்தை மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பி வைக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் விளக்கத்தை பெற்று, ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் மறைமுக தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்