#BREAKING: டெல்லி அமைச்சர் வீட்டில் சோதனை.. ரூ.2.82 கோடி பணம்..133 தங்க நாணயங்கள் பறிமுதல்!

நேற்று ஒரேநாளில் நடத்திய சோதனையில் டெல்லி அமைச்சர் வீட்டில் இருந்து ரூ.2.82 கோடி பணத்தை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.

டெல்லி மாநிலம் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கம் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்களை அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று, சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், பணம், நகைகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அமலாக்கத்துறை  வெளியிட்டுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணபரிவர்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அமைச்சர் வீட்டில் இத்தனை கோடி ரூபாய் மற்றும் இத்தனை கிலோ தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி அரசின் அமைச்சர் சத்யேந்தர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment