அதிர்ச்சி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 73ஆக உயர்வு.!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 62 பேராக இருந்த நிலையில், தற்போது அது 73ஆக உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக இருந்த நிலையில், 11 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மாநிலம் வாரியாக வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை கேரளா 17, மகாராஷ்டிரா 11, உத்தரபிரதேசம் 10, டெல்லி 6, கர்நாடகா 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோன பாதிப்பு 73ஆக அதிகரித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்