#BREAKING: சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்!

6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம்.

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.  அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22-ஆம் தேதி யூடியூப் சேனலுக்கு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘ நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்டது.

இந்த கருத்துக்கு எதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து குற்றவியல் வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தனர். இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர் தனது வாதத்தை முன்வைத்தார்.

இதன்பின் தான், சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்ற சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். நிர்வாக காரணங்கள், பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தலால் சவுக்கு சங்கர் மதுரை சிறையில் இருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment