#BREAKING: 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 4 மவவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுபோன்று டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

மேலும் தென் மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி வீரபாண்டியில் 12, கொடைக்கானலில் 7, செஞ்சி, ராசிபுரம், திருவையாற்றில் தலா 4 செ.மீ மலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்