#BREAKING:5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய , மாநில பதிலளிக்க உத்தரவு.!

  • உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடந்தார்.
  • இந்த வழக்கில் நீதிபதிகள் பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து.மேலும் வழக்கை பிப்ரவரி 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் , கண்டிப்பாக இந்த வருடம் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறினார்.இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என கோரி வழக்கு ஒன்றை தொடந்தார்.

அதில் ,பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் அடுத்த 2 மாதங்களில் மறு தேர்வு எழுதி தேர்வு பெறலாம் என உள்ளது.அப்படி மறு தேர்வு எழுதும்போது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எனவும்  , தரமான கல்விகள் உள்ள நாடுகளில் கூட இந்த பொதுத்தேர்வு இல்லை எனவே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தடைவிதிக்க வேண்டும் எனவும் மேலும் அதுதொடர்ப்பன அரசாணை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்றது .அப்போது வழக்கு தொடர்ந்தவர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் இந்த தேர்வு முறை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலங்களிலும் நடைமுறையில் இல்லை எனவே இந்த பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் மாணவர்களுக்கு அடிப்படை கல்வியை தரமானதாக தரவேண்டும் என்ற நோக்கிலே இந்த முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது என கூறினார்.மேலும் பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த 2 மாதங்களில் மறு தேர்வு நடைபெறும் என கூறினார்.

அதற்கு நீதிபதிகள் மறுத்தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன..? என்ற கேள்வியையும் உயர்நீதிமன்றக் கிளை எழுப்பியது.அதற்கு அரசு தரப்பில் மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் குறித்து அரசு முடிவு எடுக்கும் என கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் 5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
murugan