#BREAKING: வங்கி வட்டி கடன் உயர்வு – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி.

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி உயர்வால், வாடிக்கையாளர்கள் பெறும் கடன்களுக்கான இஎம்ஐ அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment