Monday, June 3, 2024

#BREAKING : பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு…!

பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

நேற்று மற்றும் இன்று என இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 24 அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பெயர்களை முன்மொழிந்த நிலையில் இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES