தொழிலாளர்களை அழைத்துச்செல்ல 1000 பேருந்துகள்.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில்  தற்போது  இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையெடுத்து அனைத்து பேருந்து , ரயில்கள்  மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து அனைத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருள்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு  மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் கூலி வேலைகளை செய்து வந்த உத்தரபிரதேசம் , பீகார் , மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களை சார்ந்தவர்கள் தற்போது தங்கள் ஊருக்கு நடைபயணமாக செல்கின்றனர்.

இது குறித்து அந்த கூலி தொழிலார்கள் கூறுகையில் , கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு கொடுக்கும் நிர்வாணத்தை இங்கு இருந்து நாங்கள் பெறமுடியாது. காரணம் எங்களுடைய ஆதார் அட்டை , வாக்காளர் அட்டை போன்றவை எங்கள் ஊரில் உள்ளது என கூறுகின்றன.

இந்நிலையில் டெல்லி போன்ற மாநிலங்களில் புலம்பெயர்ந்த உத்தரபிரதேச தொழிலாளர்களை அந்தந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல 1000 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என உத்தரபிரதேச அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
murugan