#BREAKING: தமிழ்நாட்டில்16 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..!

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை காலை சென்னைக்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகன மழைக்கு வாய்ப்பு.

இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை , திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan