#Breaking:உருவானது ‘அசானி’ புயல் – வானிலை ஆய்வு மையம்!

நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்தது.அதன்பின்னர்,ஆழ்ந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெறும் என்றும்,பின்னர் ஆந்திரா -ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.அதன்படி,16 கிமீ வேகத்தில் நகரும் புயல் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.