மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட சிறுவன்.! தாய் மற்றும் சகோதரிகளை இழந்து தனிமரமான சிறுவன்.!

மகாராஷ்டிராவில் நடந்த கட்டிட விபத்தில் மீட்கப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தலைநகர் மும்பை அருகே ராஜ்காட் மாவட்டம் மகாட், காஜல்ப்புரா எனும் பகுதியில் தாரிக் கார்டன் எனும் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் திங்கள்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் மூன்றாம் மாடி திடீரென இடிந்து விழ தொடங்கியது. அதனையடுத்த சில நிமிடங்களிலேயே கட்டிடம் முழுவதுமாக இடிந்து விழுந்தது.

விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே தகவலறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைவாக அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்தில் 7 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த 19 மணி நேரம் கழித்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய முகமது நதீம் பாங்கி என்ற 4வயதை சிறுவனை லேசான காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதனை ஆகஸ்ட் 26-ம் தேதி வீடு திரும்பிய சிறுவன் தற்போது சித்தியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் நிலையில், அந்த சிறுவனின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் விபத்தில் உயிரிழந்துள்ள செய்தி அனைவரையும் துயரத்தில் உள்ளாக்கியுள்ளது. சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் தாய், மற்றும் இரண்டு சகோதரிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தாய் மற்றும் சகோதரிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த சிறுவனால் கடைசி நேரத்தில் கூட அவரது தாய் மற்றும் சகோதரிகளின் முகத்தை பார்க்க இயலாமல் போய் விட்டது. சிறுவனின் தந்தை துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் அவராலும் மனைவி, குழந்தைகளை பார்க்க இயலவில்லை. தற்போது சிறுவன் பாங்கி அம்மா மற்றும் சகோதரிகள் எங்கே என்று கேட்டு வருகிறாராம். அவரது உறவினர்கள் சிறுவனிடத்தில் அவர்கள் இறந்த செய்தியை கூற முடியாமல் தவித்து வருகின்றனர்.