ராகுல் காந்தி விவகாரம்: 12வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு.!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2023: ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கடும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இன்று மீண்டும் கூடிய ராஜ்யசபாவும் எதிர்கட்சிகளின் முழக்கத்தால் பிற்பகல் 2 மணிக்கும், மக்களவை 12 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு முன்னர், நேற்றய தினம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மாநிலங்களவையும் ஒத்திவைக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நேற்றுடன் 11-வது நாளாக நாள் முழவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் தொடங்க இருக்கும் இரு அவைகளிலும் அதே நிலமை தான் நிலவக்கூடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment