காஷ்மீரில் உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்..!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, மக்களுடன் பண்டிகை கொண்டாடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்.

ஹோலி பண்டிகை என்பது, குளிர்காலத்தை வழி அனுப்பி விட்டு வசந்த காலத்தை வரவேற்பதாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இரண்டு நாட்கள் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

முதல் நாளான நேற்று சோட்டி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக பெரும்பாலான வடமாநிலங்களில், ஹோலிகா தகன் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல், சம்பா மாவட்டத்தில் பல இடங்களில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளூர் பொதுமக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடி  உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment