பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை நாக்பூரில் தொடக்கம்.!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான பார்டர்-கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் நாளை நாக்பூரில் தொடங்குகிறது.

கிரிக்கெட் வரலாற்றில் ஆஷஸ்(ஆஸ்.-இங்கிலாந்து) டெஸ்ட் தொடர் போன்று பிரபலமான,  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை நாக்பூரில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

gabba 2021

இதில் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் 2020-21 ஆம் ஆண்டில் நடைபெற்ற தொடரின் போது இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி (Gabba வரலாற்று வெற்றி உட்பட) வெற்றி பெற்று சாதனை படைத்தது.

sachin kumble bgt

 

இந்த ட்ராபியின் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பார்டர்-கவாஸ்கர் ட்ராபிக்காக கடும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக இதுவரை சச்சின் டெண்டுல்கர் 3235 ரன்களும், அணில் கும்ப்ளே 111 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர். கடந்த 2020-21 சீசனில் 36 ரன்கள் என ஆல் அவுட் ஆகி படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பிறகு இளம் வீரர்களுடன் வரலாற்று சிறப்பான Gabba டெஸ்டிலும் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது.

RP17gabba

இரு அணிகளும் இதற்காக கடும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மைதானங்கள் ஸ்பின்னுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பெரும்பாலும் இருப்பதால் இரு அணிகளும் தலை சிறந்த ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது. டி-20யில் கலக்கி வந்த சூர்யகுமார் யாதவ், மற்றும் கே.எஸ்.பரத் இருவரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

author avatar
Muthu Kumar

Leave a Comment