போகி பண்டிகை – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவிப்பு..!

பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல். 

இன்று போகி பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், பல இடங்கள் பழைய பொருட்களை எரித்து மக்கள் உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்குமாறும், காற்று மாசு அளவை கண்காணிப்பதற்காக, 15 இடங்களில் 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment