டிஎன்பிஎல்:காரைக்குடியை வெளியேற்றி கோவை அணி த்ரில் வெற்றி !!!

திண்டுக்கல்:தமிழ்நாடு பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் பைனுலுக்கு நுழையும் வாய்ப்பை, கோவை கிங்ஸ் அணி தக்க வைத்தது. திண்டுக்கல் நத்தத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், காரைக்குடி காளை அணியை, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது லைகா கோவை கிங்ஸ் அணி.
கோவை கிங்ஸ் அணிக்கும், காரைக்குடி காளை அணிக்கும் இடையேயான எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடந்தது.

டாஸை வென்ற கோவை கேப்டன் முரளி விஜய், பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் விளையாடிய, காரைக்குடி அணி, துவக்கம் முதலே, பேட்டிங்கில் புகுந்து விளையாடியது. அந்த அணியின் அனிருத், 27 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்தத் தொடரில் அவருடைய மூன்றாவது அரை சதமாகும். அவர், 36 பந்துகளில், 79 ரன்கள் எடுத்தார். ஆதித்யா (31 ரன்கள்), கேப்டன் பத்ரிநாத் (42), ஷாஜகான் (25) தோள்கொடுக்க, 20 ஓவர்களில், 3 விக்கெட்களை மட்டும் இழந்து, 193 ரன்கள் எடுத்தது.
சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய கோவை அணிக்கு, அனிருத், 11 ரன்கள், முரளி விஜய், 34 ரன்கள், ஹரிஷ், 16 ரன்கள், முகமது, 10 ரன்கள் சேர்த்தனர். இவர்களுடைய ஆட்டம் மந்தமாக இருந்தாலும், ரவிக்குமார் ரோகித் மறுமுனையில், புகுந்து வீடு கட்டினார். 23 பந்துகளில், அரை சதம் அடித்தார்.
கடைசி ஓவரில், 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், மைதானமே
உறைந்து போயிருந்தது. முதல் பந்து, நோ பாலானது. அதில், ரோகித் சிக்சர் அடித்தார். அதற்கடுத்த பாலும் நோ பாலானது. அதிலும் ரோகித் சிக்சர் அடிக்க, 19 ஓவர்களில், 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் வென்றது. ரோகித், 46 பந்துகளில், 102 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இந்த தோல்வியின் மூலம், போட்டியில் இருந்து காரைக்குடி காளை அணி வெளியேற்றப்பட்டுள்ளது. பிளே ஆப் சுற்றில், தகுதிச்சுற்று-1ல் தோல்வியடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன், நாளை நடக்கும் தகுதிச் சுற்று-2 போட்டியில், கோவை கிங்ஸ் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெறும் அணியே, வரும், 20ம் தேதி நடக்கும் பைனலில், தூத்துக்குடி அணியுடன் மோதும்.
author avatar
Castro Murugan

Leave a Comment