பாகிஸ்தானை மீண்டும் பந்தாடிய ..இந்திய ஹாக்கி அணி !


Related image
ஆசிய  கோப்பை ஹாக்கி விறுவிறுப்பாக நடை பெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடை பெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்ப் கொண்டது . நேற்று நடந்த ‘சூப்பர்-4’ சுற்று போட்டியில், பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
வங்கதேசத்தில் 10 வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில், இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா என, 4 அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறின.
இதில் கடைசி கட்ட போட்டிகள் நேற்று நடந்தன. ‘சூப்பர்-4’ புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த, ‘நம்பர்-6’ இந்தியா, கடைசி இடத்தில் இருந்த பாகிஸ்தானை( உலக ரேங்கிங்கில் 16வது இடம்) சந்தித்தது.
மழை காரணமாக போட்டிதுவங்குவதில்  ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் பாகிஸ்தான் களமிறங்கியது.
இதற்கேற்ப துவக்கத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து இரு ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகள் கிடைத்தன. இதை இந்திய கோல் கீப்பர் ஆகாஷ் சிக்தே அசத்தலாக தடுத்தார். முதல் பாதி கோல் எதுவும் இன்றி (0-0) முடிந்தது.
பின் இந்திய அணியின் ஆட்டம் ஆஹா…ஓஹோ என பாராட்டும்படி இருந்தது. 39வது நிமிடத்தில் சத்பிர் சிங், அடித்த பந்து எதிரணி கோல் கீப்பரை ஏமாற்றி உள்ளே செல்ல, இந்திய அணி முதல் கோல் அடித்தது.
போட்டியின் 51வது நிமிடம் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பை ஹர்மன்பிரீத் கோலாக மாற்றினார். இது இத்தொடரில் இவர் அடித்த 7வது கோல் (6 போட்டி).
அடுத்த நிமிடத்தில் இந்திய வீரர் லலித் உபாத்யாய் (52வது), ஒரு ‘பீல்டு’ கோல் அடித்து மிரட்ட, இந்திய அணி (3-0) அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. போட்டியின் 57வது நிமிடத்தில் இளம் வீரர் குர்ஜந்த் சிங், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதற்கு பதில் கோ ல் அடிக்க முயன்ற பாகிஸ்தான் வீரர்களின் முயற்சிக்கு கடைசிவரை பலன் கிடைக்கவே இல்லை.
முடிவில், இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து ‘சூப்பர்-4’ சுற்றில் 7 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, பைனலுக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாடும்.
ஆசிய கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
ஆசிய கோப்பை தொடரின் பைனலுக்கு, இந்திய அணி 8 வது முறையாக (மொத்தம் 10 தொடர்) முன்னேறியது. இதில் 2003, 2007ல் கோப்பை வென்ற இந்தியா, இன்று அசத்தும் பட்சத்தில், மூன்றாவது முறையாக கோப்பை வெல்லலாம்.
தொடர்ந்து இந்திய ஹாக்கி அணி வெற்றிபெறுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *