கோலியின் சாதனையை முறியடிக்க பிறந்த தென் ஆப்ரிக்கா துவக்க ஆட்டக்காரர் …ஆம்லா

Image result for hashim amla

வங்கதேஷதுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தால் அம்லா விராத்- இன்  சாதனையை முறியடித்தார் 
ஆம்லாவின் 26-வது ஒருநாள் சதமாகும். இந்த , 26-வது சதத்தை ஆம்லா 154வது இன்னிங்ஸில் எடுத்து, குறைந்த இன்னிங்ஸ்களில் 26 சதங்கள் கண்ட வகையில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 166 இன்னிங்ஸ்களில் 26 சதங்கள் எடுத்தார், சச்சின், ரிக்கி பாண்டிங் 3 மற்றும் 4-ம் இடங்களில் உள்ளனர்.
முதல் விக்கெட்டுக்காக 282 ரன்களைச் சேர்த்தது இலக்கை விரட்டும் போது அதிகபட்ச ரன்களாகும். முன்னதாக 2016- ம் ஆண்டு பர்மிங்ஹாமில் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் 256 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி எடுத்ததே அதிகபட்ச விரட்டல் தொடக்க விக்கெட் கூட்டணி சாதனையாக இருந்தது.
டி காக், ஆம்லா கூட்டணியின் இந்த 282/0 என்ற தொடக்க ரன்குவிப்பு ஒருநாள் போட்டிகளில் 3-வது சிறந்த முதல் விக்கெட் ரன்களாகும். இதில் சாதனையை வைத்திருப்பவர்கள் இலங்கையின் சனத் ஜெயசூரியா, உப்புல் தரங்கா, இவர்கள் 2006-ல் இங்கிலாந்தைப் புரட்டி எடுத்த போது 286 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 2-வது அதிகபட்ச தொடக்கக் கூட்டணை அமைத்தவர்கள் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட், இவர்கள் இருவரும் 2017-ல் அடிலெய்டில் 284 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி இத்துடன் 7-வது முறையாக விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றுள்ளது. மே.இ.தீவுகள் 11 முறையும் நியூஸிலாந்து 8 முறையும் இந்தியா 7 முறையும் இப்படி வென்றுள்ளது.
  ஆம்லாவும் டி காக்கும் இணைந்து ஒரே இன்னிங்சில் 4 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். ஆம்லா, டிவில்லியர்ஸ் கூட்டணி 5 முறை ஒரே இன்னிங்சில் சதக்கூட்டணி அமைத்துள்ளனர். சச்சின், கங்குலி ஜோடி 4 முறை ஒரே இன்னிங்ஸில் சதக்கூட்டணி அமைத்துள்ளனர்.
13-வது ஒருநாள் சதத்தை டி காக் 86-வது இன்னிங்சில் டி காக் எடுத்துள்ளார், ஆம்லா 83 இன்னிங்ஸ்களில் 13வது ஒருநாள் சதம் எடுத்தார். கோலி, டிகாக் இருவரும் சம இடத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் சதம் எடுத்த முதல் வங்கதேச வீரரானார் முஷ்பிகுர் ரஹிஇம்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment