முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா பலபரீட்சை…!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்யில் நடந்து வரும் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதுகின்றன.
மகளிர் உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிறந்த நான்கு அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. இன்று நடக்கும் முதலாவது அரையிறுதியில் உள்ளூர் அணியான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா உடனான போட்டியில் தோற்ற பிறகு தோல்வியே அடையாமல் பலமான அணியாக இங்கிலாந்து மகளிர் அணி வலம் வருகிறது.
அந்த அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டும் சிறப்பாக உள்ளன. இந்தியா தவிர மீதம் இருக்கும் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து அணி. பலம்வாந்த ஆஸ்திரேலிய அணியையும் தோற்கடித்து அந்த அணிக்கு அதிர்ச்சியளித்தது. தொடர் வெற்றிகளால் நம்பிக்கை பெற்றுள்ள அந்த அணி உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு இறங்குவது கூடுதல் பலம்.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை, வெற்றி தோல்வி என ஏற்ற இறக்கங்களுடன் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றது. அந்த அணி ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து ஆகிய பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது. மற்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியை வெறும் 48 ரன்களில் சுருட்டி, ஏழே ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்து பெரிய வெற்றியைப் பதிவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இவ்விரண்டு அணிகளும் மோதிய முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கிலாந்து அணி 373 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி கடுமையாகப் போராடி 305 எடுத்து தோல்வி அடைந்தது.
தென்னாப்பிரிக்க அணியும் இங்கிலாந்துக்கு சளைத்தது இல்லை என்ற அளவிலே தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் கடுமையானதாகவே இருக்கும்.இப்போடியினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.
author avatar
Castro Murugan

Leave a Comment