இரத்தநிலா பூமியை அழிக்குமா!!

நேற்று (திங்கட்கிழமை) இரவு 10:55 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாகி இரண்டு மணி நேரம் நீடித்தது மழைக்கால மேகங்கள் காரணமாக, இந்த சந்திர கரகணம் இந்தியாவின் வட பகுதிகளிலும், குறிப்பாக டெல்லியிலும் மிகவும் தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இதுவாகும். வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி – 1918-ஆம் ஆண்டுக்கு பின் ஒரு கரையில் இருந்து மறுகரை வரை நிழலால் ஆக்கிரமிப்பு செய்யும் – உலகின் மிக அழகான சூரிய கிரகணம் நிகழவுள்ளது. 

விசித்திரமான நிகழ்வு:

இயற்கை கொஞ்சம் வித்தியாசமாக, அல்லது கொஞ்சம் விசித்திரமாக நடந்து கொண்டால் கூட, உடனே “உலகம் அழிய ஆரம்பித்து விட்டது” என்று குரல்கள் ஓங்கும், மறுபக்கம் “அறிவியல் என்று ஒன்று இருக்கிறது, அதை முதலில் நம்புங்கள். அது பொய் சொல்லாது” என்ற குரல்களும் ஓங்கும். அப்படியான இருவகை குரல்களையும் எழுப்பிய விண்வெளியில் விசித்திரமான நிகழ்வுதான் – இரத்த நிலா.

இரத்த நிலாவின்உருமாற்றம்:

கடந்த ஆண்டு (செப்டம்பர் 27 மற்றும் 28, 2015) உலகின் பல்வேறு இடங்களில் தோன்றிய இரத்த நிலா பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும், பீதிகளும் உள்ளன. ரத்த நிலா – என்பது முழு சந்திர கிரகணத்தின் போது வெள்ளை நிலா முழுமையாக செம்பு கலந்த சிவப்பு நிறத்தில் உருமாறி விடும் என்பதாகும். அதாவது, உதயமாகும் அதிகாலை சூரியனைப் போல நிலா காட்சியளிக்கும்.

28 நாட்களுக்குள் உலகம் அழியும்

அதனை தொடர்ந்து ரத்த நிலா தோன்றுதல் மூலம் உலகில் பயங்கரமான நில நடுக்கங்கள் ஏற்பட இருக்கிறது என்றும் சிலர் அறிவித்துள்ளனர். இதற்குகூடுதல் பலம் சேர்க்கும் வண்ணம் ரத்த நிலா தோன்றிய 28 நாட்களுக்குள் உலகம் அழியும் என்ற வதந்தியும் இன்டர்நெட்டில்பரவி வருகிறது.

இரண்டாம் இயேசு பிறக்கபோகிறார்:

எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவை சேர்ந்த பெரும் கிருஸ்துவ அமைப்பை சேர்ந்த இருவர், பைபிள் அடிப்படையில் இரத்த நிலா என்பது இரண்டாம் இயேசு பிறப்பு நடக்க போவதற்கான எச்சரிக்கை என்று பரப்புரை செய்தனர். மறுகையில், அறிவியலாளர்களும் விண்வெளி இயற்பியலாளர்களும் மேற்க்கூறப்பட்டுள்ள அத்துணை கருத்துகளுக்கும், “இரத்த நிலா ஒரு இயற்கையான நிகழ்வு தான்” என்று கூறி மறுப்பும் தெரிவுத்தனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment