ஜெயலலிதாவின் மரணம் பீதியை கிழப்பும் தீபா

ஜெயலலிதாவின் மரணம் குறித்து என்னிடம் வலுவான ஆதாரம் உள்ளது. அதை நான் விசாரணை கமிஷனிடம் தெரிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், அ.தி.மு.க. ஜெ.தீபா அணியின் தலைவருமான தீபா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எஃப்.எம். நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூறியதாவது,
தற்போது தேர்தல் வந்தால் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். அம்மாவின் ஆட்சி அமைப்போம். எடப்பாடி பழனிச்சாமியின் அரசுக்கு மக்களின் ஆதரவு இல்லை. ஓபி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகிய இருவரும் சேர்ந்து அரசியல் ஆதாயம் தேட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இணைவதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. டிடிவி தினகரன் தமிழக மக்கள் மற்றும் அதிமுகவுக்கு என்ன செய்தார்? அவர் மீது பல வழக்குகள் உள்ளன.
அதிமுகவினர் சசிகலாவின் குடும்பத்தாரை விரட்டிவிட்டு நல்லாட்சி நடத்தினால் மக்களும் நலம். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷன் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்று ஆகும்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து என்னிடம் வலுவான ஆதாரம் உள்ளது. அதை நான் விசாரணை கமிஷனிடம் தெரிவிப்பேன் என்றார்.

Leave a Comment