டிஎன்பிஎல்: இரண்டாவது தகுதிச் சுற்றில் சென்னை- கோவை அணிகள் பலபரீட்சை!!

திருநெல்வேலியில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் லீக் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை சூப்பர் கில்லீஸ் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறது. இந்த ஆட்டத்திலும் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிப் பெற்றால், 2-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறும்.
சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கோபிநாத், அந்தோணி தாஸ், தலைவன் சற்குணம், சசிதேவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சாய் கிஷோர், அலெக்சாண்டர் உள்ளிட்டோரை நம்பியுள்ளது சூப்பர் கில்லீஸ்.
அதேநேரத்தில் கோவை அணி முரளி விஜயின் வருகைக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசி மூன்று ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
இதுதவிர வெளியேற்றும் சுற்றில் காரைக்குடி அணிக்கு எதிராக 194 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விஜய், சூர்யபிரகாஷ், அனிருத் சீதா ராம், விக்கெட் கீப்பர் ரோஹித் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.
இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு இடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுதிள்ளது..
author avatar
Castro Murugan

Leave a Comment