அடிப்படை வசிதிகள் இல்லாமல் இயங்கும் தூத்துக்குடி ரயில் நிலையம்….!

தூத்துக்குடி: கடந்த மூன்று ஆண்டு காலமாக தூத்துக்குடி இரயில் நிலையத்தில் குடிநீர், டாய்லட், கேன்டின் வசதிகள் இல்லை, கேட்டால் தூத்துக்குடி இரயில் நிலையம் தென் மாவட்டங்களில் உள்ள இரயில் நிலையங்களில் அதிக வருவாய் உள்ள இரயில் நிலையமாக இருப்பதால் முதல் தரமான இரயில் நிலையமாக இருப்பதால் தானம் .என்ன நியாயம் தோழர்களே வசதிகள் அதிக படுத்துவார்கள் என்று தான் கேள்வி பட்டிருக்கிறோம் ஆனால் இங்கு வசதி குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரயில் நிலையத்திற்கு வெளியே விற்கும் சுகாதரமற்ற உணவையும், போலி தண்ணீர் பாட்டில்களையும் வாங்கி உடம்பை கெடுத்து கொள்ள .வேண்டியிருக்கிறது. வாகன காப்பகத்தில் ரூ.10 வாங்கப்படுகிறது, அங்கு வாகனம் நிறுத்த சென்றால் அங்கு மின்சாரம் கிடையாதாம், இதனால் இரவு ேநரங்களில் வாகனம் நிறுத்துவோர் மிகுந்த சிரமத்திற்க்கு ஆளாக வேண்டியுள்ளது , மின்சாரம் வழங்க இலஞ்சம் கேட்கிறார்களாம் . தூத்துக்குடி நகரில் இருந்து செல்லும் அனைத்து இரயில் பெட்டிகளும் காலவதியான பெட்டிகள் , சுகாதாரமற்ற டாய்லட், துசியும் குப்பையுமான பெட்டிகள், எலித்தொல்லை வேறு, இத்தனைக்கும் காரணம் நம் ஊர் மக்களின் சகிப்புதன்மைதான் , பயணிகள் சங்கம் என்ன செய்கிறது, மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள், மக்களே போராடத் தயாராகுங்கள், விரைவில்  இரயில் நிலையத்தின் சீர்கேடுகளை கண்டித்தும், அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும், கட்சி பேதமில்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அறிக்கை:
D. ராஜா,
மாநகர் செயலாளர் CPI (M)
தூத்துக்குடி.

author avatar
Castro Murugan

Leave a Comment