கறுப்பின இளைஞர் படுகொலை! அமெரிக்காவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

கறுப்பின இளைஞர் படுகொலையை  கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டன 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது. 

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள,  மின்னியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரால், ஜார்ஜ் ஈவு இரக்கமற்ற முறையில், முழங்காலால் கழுத்து நெரித்து  கொல்லப்பட்டார். 

ஜார்ச், போலீஸ் அதிகாரியிடம், கெஞ்சி கேட்ட போதும், அந்த போலீஸ் அதிகாரி இரக்கம் காட்டவில்லை. இதனையடுத்து இவர் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியான நிலையில்,  போலீஸ் அதிகாரியின் இந்த செயலை கண்டித்து கடந்த 9 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வாஷிங்க்டனில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில், நியூயார்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து, அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், கால்வாசிக்கும் மேற்பட்டோர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.