மீண்டும் கருப்பின இளைஞன் கொலை – வாஷிங்கடனில் வெடித்த கலவரம்!

கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அமெரிக்காவில் மீண்டும் போராட்டம்.

அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிரான வன்முறை நீடித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜார்ஜ் ஃ பிளாயிட் எனும் கருப்பின இளைஞர் போலீசாரால் கொடூரமாக கொல்லப்பட்டு, அவனுக்காக நீதி கேட்டு பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. இந்த பிரச்சினையை இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது மற்றொரு இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் ஜேக்கப் பிளேக் என்னும் மற்றொரு இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகையை நோக்கி அணிவகுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றி உள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் விரட்டி அடித்துள்ளனர்.

author avatar
Rebekal