பிரதமர் மோடி குஜராத் கசாப்புக் கடைக்காரர்.? பாகிஸ்தானுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்.!

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடி குறித்து பேசியதற்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முன் பாஜகவினர் போராட்டம். 

ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது.

இந்த கவுன்சில் கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் இடையே கடுமையாக வார்த்தை போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறுகையில்,  ஒசாமா பின்லேடன் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் இன்னும் இருக்கிறார். அவர் தான் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். மோடி பிரதமராக பதவி ஏற்கும் வரையில் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ‘ என குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முன்னிலையில், பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment