ராஜஸ்தானில் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டத்திற்கு முன் போர்பந்தருக்கு மாற்றம்.!

கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சியுடன் அம்மாநில முதல்வர் அசோக் கெலொட் இணைத்தார். இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த மனு மீதான விசாரணை வந்தது. அப்போது நீதிபதி இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஒத்திவைத்தார்.

ராஜஸ்தானில் ஆகஸ்ட் 14 முதல் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன் பாரதீய ஜனதா கட்சி தனது ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்களை குஜராத்தின் போர்பந்தருக்கு மாற்றியுள்ளது. இதுவரை பாஜக குறைந்தது 14 எம்.எல்.ஏ.க்களை குஜராத்திற்கு மாற்றியுள்ளதாகவும், எம்.எல்.ஏக்கள் காந்திநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர் என கூறப்படுகிறது.

ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரசுடன் இணைப்பது தொடர்பான வழக்கில் வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி விசாரணை உள்ளதால், ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பாஜக எம்.எல்.ஏக்களுடன் தொடர்பு  கொள்ள காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என்று பாஜக அஞ்சுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், மேலும் சில கட்சி எம்.எல்.ஏக்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூருக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
murugan