இன்று இந்திய விடுதலை போராட்ட வீரரான மதுரை காந்தியின் பிறந்தநாள்!

இந்திய விடுதலை போராட்ட வீரரான என்.எம்.ஆர்.சுப்பராமன், மதுரையில், இராயலு அய்யா – காவேரி அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது மனைவி பெயர் பர்வதவர்தனி.

இவர் காந்திய வழியில், இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் காந்திய கொள்கைகளில், அரசின் முன்னேற்றத்தை தேர்ந்தெடுத்து இதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். இவர் 1939-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல்வதற்கு, எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக உறைவிடப்பள்ளிகள் நிறுவி உள்ளார். நரிக்குறவ பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்தார். இவர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மக்களால், “மதுரை காந்தி” என அழைக்கப்படுகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.