அரபிக்கடலில் 12 மணி நேரத்தில் ‘பைபர்ஜாய்’ புயல் உருவாக வாய்ப்பு..!

அரபிக்கடலில் 12 மணி நேரத்தில் ‘பைபர்ஜாய்’ புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து தென்மேற்கே 1,100 கிமீ தொலைவில், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் முன் வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. இந்த சூறாவளிக்கு ‘பைபர்ஜாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.